Latestமலேசியா

தீவிபத்தில் கோத்தா கமுனிங் தேவாலயம் அழிந்தது

ஷா அலாம், பிப் 3 – கோத்தா கமுனிங்கில் கடை வீடு ஒன்றில் செயல்பட்டு வந்த கோத்தா கமுனிங் தேவலாயம் அழிந்தது. நேற்றிரவு மணி மணி 11,19 அளவில் அந்த தேவாயத்தில் தீ பரவியதாக தகவல் அறிந்தவுடன் உடனடியாக 25 தீயணைப்பு வீரர்களைக் கொண்ட நான்கு தீயணைப்பு வண்டிகள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீ மற்றும் மீட்புத்துறைய் இயக்குனர் Norazam Khamis கூறினார்.

கோத்தா கமுனிங்கில் உள்ள இரண்டு மாடி கடை வீட்டின் இரண்டாவது மாடியில் செயல்பட்ட Assemblies of God Church தேவாலயம் தீ விபத்தில் அழிந்தது . தேவாலயம் செயப்பட்டு வந்த மேல் மாடி மட்டுமே பாதிக்கப்பட்டது, இரவு மணி 11.50 அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அந்த தீ விபத்தில் எவரும் காயம் அடையவில்லை. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Norazam Khamis தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!