கோலாலம்பூர், ஏப் 9 – சமயம் மற்றும் இன விவகாரங்களில் தீவிரமான கண்ணோட்டங்களை புறக்கணித்துவிட்டு மக்களை ஒன்றுபடுத்தும் விவகாரங்களில் கவனம் செலுத்தும்படி மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Ibrahim அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் Muhamad AKmal Saleh , மலாக்கா அம்னோ தலைவர்
டத்தோஸ்ரீ Abdul Raud Yusof மற்றும் DAP துணை செயலாளர் Liew Chin Tong ஆகியயோருக்கு இன்று Sultan Ibrahim பேட்டி வழங்கினார். இனம் மற்றும் சயமம் தொடரபாக ஏற்பட்ட உணர்ச்சிகரமான விவகாரங்கள் தொடர்பான ஆகக்கடைசியான மேம்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் அரசியல் தலைவர்களுடனான பேரரசரின் இன்றைய சந்திப்பு அமைந்திருந்தது.
தலைவர்கள் தங்களது நடவடிக்கையில் முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் வகையில் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். இதன்வழி மலேசியாவின் பல்லின மக்களை ஒன்றுபடுத்த முடியும் என Sultan Ibrahim வலியுறுத்தினார்.
அனைத்து தரப்பினரும் பிரிவினைக்கு பதிலாக தங்களுக்கிடையிலான ஒற்றுமையில் கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை தெரிவிப்பதாகவும் மக்கள் ஒன்றுபட்டு ஐக்கியத்துடன் இருப்பதையே தாம் காணவிரும்புவதாக Sultan Ibrahim தெரிவித்தார். மேலும் இனம் மற்றும் சமய விவகாரங்களில் தீவிரவாத கருத்துக்களை அரசியல் தலைவர்கள் கொண்டுடிருக்கக்கூடாது. DAP மற்றும் அம்னோ மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களுக்கும் தாம் இதனை நினைவுறுத்தவிரும்புவதாக அவர் கேட்டுக்கொண்டார். தங்களது முதிர்ச்சியான நடவடிக்கைகள் முன்னுதாரணமாக இருப்பதன் மூலம் மலேசியர்களுக்கிடையே தொடர்பு பாலாமாக தலைவர்கள் இருக்க வேண்டும் என அவர் வலியுத்தினார். அண்மையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை ஒரு பாடமாகக் கொண்டு தேசிய ஒற்றுமையை தொடர்ந்து நிலைநாட்டுவதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பேரரசர் அறைகூவல் விடுத்தார்.