
சென்னை, ஜூலை 16 – தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் தீவிர மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் தளபதி விஜய்.
இது அவர் அரசியலில் இறங்குவதற்கான அறிகுறியா?
அண்மையில்கூட ‘வாக்கு செலுத்த பணம் வாங்க கூடாது” என்று அவர் அறிவுறுத்தியது, விரைவில் அரசியலில் இறங்க தயாராகி வருகிறார் என்பதையே காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் ஏழை மாணவர்கள் படிக்க வசதியாக இரவு பாடசாலை திட்டமான ‘தளபதி விஜய் பயிலகம்’ இன்று தொடங்கியுள்ள நிலையில்,
அரசியலில் கால்பதிக்க விஜய் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவே அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம் வேறு எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் அவர் சந்திக்கவில்லை என்பதால்
முழுக்க முழுக்க தனித்தே விஜய் களமிறங்குவார் என்றும் ஆருடங்கள் வெளியாகியுள்ளன.
நிலைமை இப்படி இருக்க, விஜய்க்கு இது தேவையா என சிலர் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளனர்.