Latestமலேசியா

பாலிங்கில் உள்ள கடையில் ஒரே நேரத்தில் மூன்று ராஜ நாகங்கள்; அதிர்ச்சியில் உறைந்தார் கடை உரிமையாளர்

அலோஸ்டார் , பிப் 2 – பாலிங்கில் உள்ள கம்போங் ஹாஜி அப்பாசில் தமது தளவாடச் சாமான் கடையில் ஒரே நேரத்தில் மூன்று ராஜ நாகங்கள் இருந்ததைக் கண்ட அக்கடையின்  உரிமையாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.  நேற்று மாலை மணி 4.20 அளவில் அந்த கடைக்குள் ராஜ நாகங்கள் இருப்பதை 30 வயதுடைய அந்த கடை உரிமையாளர் உணர்ந்து தங்களுக்கு தகவல் கொடுத்ததாக பாலிங்  மாவட்ட சிவில் தற்காப்பு படை  அதிகாரி  லெப்டனன் முகமட் ஃபைசோல் அஜீஸ் தெரிவித்தார்.  அந்த ராஜநாகங்களை பிடிப்பதற்காக   இரு அதிகாரிகள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

ஒவ்வொன்றும் 1.5 மீட்டர் நீளம் கொண்ட அந்த விஷப் பாம்புகளை பிடிப்பதற்கு அவர்கள் 20 நிமிடம் எடுத்துக்கொண்டனர். பிடிப்பட்ட அந்த பாம்புகள் அனைத்தும் வனவிலங்கு தேசிய பூங்கா துறையிடம் ஒப்படைப்பதற்காக சிவில் தற்காப்பு படை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டன. கெடாவில் தற்போது கடுமையான வெப்பமாக இருப்பதால் அந்த பாம்புகள்  குளிர்ச்சியான இடத்தை தேடி வந்திருக்கலாம் என அவர் கூறினார்.  “Monocled Cobra” அல்லது “Indian spitting cobra” எனப்படும் இந்த வகை ராஜநாகங்கள் தென்கிழக்கு ஆசியா நாடுகளில்  காணப்படும் ஒருவகை  நாகப்பாம்பு ஆகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!