
ரவாங், மே 27 – ரவாங், Taman Desa Country Homes சில் இன்று விடியற்காலை மணி 6.28 அளவில் நிகழ்ந்த தீ விபத்தில் மனநிலை பாதிக்கப்ட்ட ஆடவர் ஒருவர் மரணம் அடைந்ததை சிலாங்கூர் தீ மற்றும் மீட்புக் துறையின் துணை இயக்குனர் Wan Md Razali Wan Ismai உறுதிப்படுத்தினார். தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு Batu Arang மற்றும் Rawang தியணைப்பு நிலையத்தை சேர்ந்த இரண்டு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 13 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டின் கீழ் தளத்தில் தீப்பிடித்ததாகவும் எனினும் தீயணைப்புப் படை வீரர்கள் வருவதற்கு முன்பாகவே அண்டை வீடுகளைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தீயை அணைத்தாக கூறப்பட்டது. அந்த வீட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட 56 வயது ஆடவர் ஒருவர் தனது வயதான சகோதரருடன் வசித்து வந்துள்ளார். அவ்வீட்டின் கீழ்த்ளத்திலுள்ள படிக்கட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட ஆடவரின் கருகிய உடல் மீட்கப்பட்டது.