சுங்கைப் பட்டாணி, மார்ச் 4 – செயற்கை ரப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 11 வயதுடைய சிறுமி கருதி மாண்டார். Bakar Arang தொழில்மயப் பகுதியில் விடியற்காலையில் நிகந்த அந்த விபத்தில் Misha Kasih என்று அடையாளம் கூறப்பட்ட அந்த சிறுமி இறந்தார்.
முதலாளியின் வளர்ப்பு பிள்ளையான அச்சிறுமி அந்த தொழிற்சாலையின் மேல் மாடியிலுள்ள வீட்டின் தூங்கிக்கொண்டிருந்தபோது அந்த பரிதாபச் சம்பவம் நிகழ்ந்தது. அந்த தொழிற்சாயில் பல்வேறு அறைகளில் தங்கியிருந்த தொழிற்சாலை முதலாளியின் இதர 5 உறுப்பினர்களும் இரண்டு வங்காளதேச பிரஜைகளும் உயிர் தப்பினர்.