
கூச்சிங் , வயது 28 – கூச்சிங்கிற்கு அருகே Batu Kawa வில் மக்கள் வீடமைப்பு பகுதியில் 6 வயது சிறுவன் தீ விபத்தில் மரணம் அடைந்த சம்பவத்தில் ஐந்து இரட்டை மாடி வீடுகள் அழிந்தன. இன்று பிற்பகலில் அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக சரவா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி தெரிவித்தார். Zayyan Nazeem Zainal Abidin என்று அடையாளம் கூறப்பட்ட அந்த சிறுவன் தீவிபத்தின்போது பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றில் முதல் மாடியில் சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது. தீ அணைக்கப்பட்ட பின்னர் மாலை மணி 3.30 அளவில் அவ்வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையில் அச்சிறுவனின் கருகிய உடல் மீட்கப்பட்டது.