
பென்சில்வேனியா, ஆக 6 – அமெரிக்கா பென்சில்வேனியா நகரில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அவசர அழைப்பு கிடைத்து, சம்பவத்தளம் விரைந்த தீயணைப்பு வீரருக்கு காத்திருந்தது திகிலூட்டும் அதிர்ச்சி. அவ்விபத்தில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் மற்றும் 7 பெரியவர்களை இழந்துள்ளார் அந்த தீயணைப்பு வீரர். Harold Baker எனும் அந்த தீயண்ணைப்பு வீரருக்கு விபத்தில் சிக்கியது தனது குடும்ப உறுப்பினர் என சம்பவத்தளம் வந்த பிறகே தெரிய வந்துள்ளது. இவ்விபத்தில், தனது மகன், மருமகள், மாமனார், மனைவியின் தம்பி மற்றும் தங்கை, 3 பேரக்குழந்தைகள் மற்றும் இதர இரு உறவினர்கள் என மொத்தம் 10 குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளார் அவர். உயிரிழந்த குழந்தைகள் மூவரும் 5,6 மற்றும் 7 வயதுடையவர்களாவர். இதர குடும்ப உறுப்பினர்கள் 22 முதல் 79 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் குற்ற அம்சங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.