
ஜொகூர் பாரு, கெம்பாசில், வீடொன்றில் ஏற்பட்ட தீயில், 70 வயது மூதாட்டியும், பத்து வயது சிறுவரும் தீப்புண் காயங்களுக்கு இலக்காகினர். 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண் காயத்திற்கு இலக்கானதாக கூறப்படுகிறது. அதிகாலை மணி ஐந்து வாக்கில் அந்த தீ விபத்து தொடர்பில் அவசர அழைப்பு கிடைத்தாக, லர்க்கின் தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு கொமாண்டோ சம்சூல் கோமாரி பாக்கார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அதிகாலை மணி 6.35 வாக்கில் தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளை ; தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.