Latestமலேசியா

துங்குவின் மூத்த புதல்வி கதிஜா காலமானார்

கோலாலம்பூர், ஆக 16 – நாட்டின் முதலாவது பிரதமரும் தேசத் தந்தையுமான துங்கு அப்துல் ரஹ்மானின் மூத்த புதல்வி துங்கு கதிஜா
( Tunku Khadijah ) நுரையீரல் புற்றுநோயினால் பந்தாய் மருத்துவமனையில் காலமானார். 89 வயதான துங்கு கதிஜா நேற்று மாலை மணி 6.50 அளவில் இறந்தார் என அவரது புதல்வி ஷரிபா ( Sharifah Menyalara Hussein) தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் இறந்தார். இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கடைசி கட்ட நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சையை தமது தாயார் மேற்கொண்டு வந்ததாக ஷரிபா தெரிவித்தார். துங்கு கதிஜாவுக்கு மூன்று புதல்விகளும் ஏழு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!