Latestஇந்தியாசினிமா

‘துணிவு’; வெளியானது அஜித்தின் 61-வது பட தலைப்பு

சென்னை, செப் 22 – ‘துணிவு’ இதுவே அஜித்தின் 61 வது படத்தின் தலைப்பு. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் இதுவாகும்.
நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகி வரும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுநாள் வரை படத்திற்கான தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது.

படத்திற்கு துணிவே துணை, துணிவு ஆகியவற்றில் ஒன்றை வைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று மாலை படத்தின் தலைப்பை, படக் குழுவினர் அறிவித்தனர். அதன்படி படத்திற்கு ‘துணிவு’ என
பெயரிட்டு, first look போஸ்டரை வெளியிட்டனர்.

போஸ்டரில் அஜித் ஒரு நாட்காலியில் சாயந்த படி கையில் துப்பாக்கியுடன் உள்ளார்.
தலைப்பிற்கு கீழே கேப்ஷனாக “No guts no glory” – ‘தைரியம் இல்லையென்றால் புகழ் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். படத்தின் தலைப்பு வெளிவந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!