
கோலாலம்பூர், மார்ச் 6 – இந்திய விவகாரங்களுக்கான தமது சிறப்பு அதிகாரியாக அர்வின் அப்பளசாமியை துணைப்பிரதமரும் அம்னோவின் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். 28 வயதுடைய அர்வின் மார்ச் முதல் தேதி முதல் இந்த பணியை ஏற்றுக்கொண்டுள்ளதாக வணக்கம் மலேசியாவிடம் உறுதிப்படுத்தினார். யு.கே.எம் எனப்படும் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவராக அர்விந்த் மலாயா பல்கலைகழ்த்தில் முதுகலைப் பட்டம் பெற்துள்ளார். தற்போது அவர் பி.எச் டி பட்ட மேற்படிப்பையும் மேற்கொண்டு வருகிறார். ஊத்தான் மெலிந்தாங்கை சேர்ந்த ஐ.பி.எப் தேசிய உதவித் தலைவர் அப்பளசாமியின் மகனான அர்விந்த் 2015 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை பேரா மாநில இளைஞர் சட்டமன்ற உறுப்பினராகவும் தற்போது ஆசியான் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் இயக்கத் தலைவராகவும் இருந்து வருகிறார்.