
புத்ரா ஜெயா, டிச 10 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த துணையமைச்சர் பட்டியலில் இடம் பெற்ற 27 பேரில் 15 பேர் புதுமுகங்களாவர். புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் Ramkarpal Singh , Malaka, Hang Tuah நாடாளுமன்ற உறுப்பினர் Adam Adli, P.K.R உதவித் தலைவர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரும் இவர்களில் அடங்குவர். புதிய துணையமைச்சர்கள் அனைவரும் பேரரசர் முன்னிலையில் இன்று மாலை மூன்று மணியளவில் இஸ்தானா நெகாராவில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். இதனிடையே ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுக்குப் பின் துணையமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அன்வார் தெரிவித்தார். இளம் தலைமுறையைச் சேர்ந்த பலர் துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதோடு இவர்கள் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.