சென்னை, செப்டம்பர் 18 – தமிழகத்தின் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக துணை முதலமைச்சராகிறார் என்ற தகவல் தீயாய் பரவி வருகிறது.
அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு வந்த தமிழக முதலைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம், 24 மணி நேரங்களில் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.