
அங்காரா, செப் 10 – துர்கியே அங்காராவில், இறுதிச் சடங்கு நடைப்பெற்றுக் கொண்டிருந்த ஒரு வீட்டை கட்டுப்பாட்டை இழந்த டிராக் வண்டி ஒன்று மோதியதில் அங்கு கூடியிருந்தவர்களில் 5 பேர் பலியாகினர்.
மேலும் 25 பேர் காயடைந்தனர். அங்காராவில் காராமன்மாராஸ் எனும் இடத்தில் இச்சம்பவர் நேற்று நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து கருத்துரைத்துள்ள வலைத்தளவாசிகள், இதுதான் துன்பத்திலும் துன்பம் என்பதற்கான நிஜ அர்த்தமா எனக் கேட்டு பதிவிட்டுள்ளனர்.
இவ்விபத்தை போலிசார் விசாரித்து வருகின்றனர்.