Latestமலேசியா

துன்புறுத்தப்பட்டு ஒரு வயது குழந்தை மரணம் இளம்பெண், காதலன் உட்பட 9 பேர் கைது

புக்கிட் மெர்தாஜம், ஆக 29 – துன்புறுத்தப்பட்டு ஒரு வயது சிறுவன் மரணம் அடைந்தது தொடர்பில் இளம் பெண், அவரது காதலன் மற்றும் தனிப்பட்ட இதர எழுவர் உட்பட ஒன்பது நபர்களை போலீசார் கைது செய்தனர். 16 மற்றும் 48 வயதுக்குட்பட்ட நான்கு ஆடவர்கள் மற்றும் ஐந்து பெண்கள் Seberang Perai யில் வெவ்வேறு இடங்களில் கைது செய் செய்யப்பட்டதாக Seberang Perai Tengah போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Tan Cheng San தெரிவித்தார். சனிக்கிழமையன்று இரவு ஏழு மணியளவில் Seberang Jaya மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தை இறந்ததாக போலீசிற்கு தகவல் கிடைத்தாக அவர் கூறினார்.

அந்த குழந்தை மயங்கி விழுந்துவிட்டதால் அவனுக்கு சிகிச்சை தேவைப்படுவதாக கூறி 30 வயதுக்குட்பட்ட நபர் ஒருவன் Seberang Jaya மருத்துவமனைக்கு அக்குழந்தையை கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக Tan Cheng San கூறினார். கைது செய்யப்பட்ட 16 வயது பெண் மரணம் அடைந்த சிறுவனின் தாயார் என்றும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!