
மூவார், அக் 4 தங்களது தாய் மற்றும் அவரது காதலரினால் துன்புறுத்தப்பட்ட இரண்டு சகோதரிகள் மீட்கப்பட்டனர், மூவார் ஜலான் மேரியம் மிலுள்ள ஒரு வீட்டிலிருந்து 5 மற்றும் ஆறு வயதுடைய அந்த சிறுமிகள் மீட்கப்பட்டதாக மூவார் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ராய்ஸ் முக்லிஸ் அஸ்மண் அஜிஸ் தெரிவித்தார். பிரம்பினால் தாக்கப்பட்ட அந்த சிறுமிகள் உடலில் சிராய்பு காயங்கள் காணப்பட்டன. செப்டம்பர் 16 ஆம் தேதிக்கும் 26ஆம் தேதிக்குமிடையே அந்த சிறுமிகள் துன்புறுத்தப்பட்டுள்ளது தங்களது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ராய்ஸ் முக்லிஸ் கூறினார். அந்த சிறுமிகளின் தந்தை மூவார் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து 36 வயது பெண்ணும் அவரது 38 வயது காதலனும் கைது செய்யப்பட்டதாக ராய்ஸ் முக்லிஸ் தெரிவித்தார்.