
சிரம்பான், செப் 14 – தனது தந்தை மற்றும் வளர்ப்புத் தாயினால் 6 வயது சிறுவன் துன்புறுத்தப்பட்டபோதிலும் அவனது இதர மூன்று உடன்பிறப்புகள் தற்போது அவர்களது பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர். நான்கு, முன்று மற்றும் ஒரு வயதுடைய அந்த உடன்பிறப்புகள் நல்ல உடல் நலத்தோடு இருப்பதோடு அவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லையென சமூக நல இல்லத்தின் இயக்குனர் ரோஸ்மன் சார்டி தெரிவித்துள்ளார். அந்த சிறார்கள் தற்போது ஜெம்போலில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் இருக்கின்றனர். பஹாவில் ஆறு வயது சிறுவனை துன்புறுத்தியதாக கூறப்பட்டது தொடர்பில் ஒரு தம்பதியர் கைது செய்யப்பட்டதாக நேற்று ஜெம்போல் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் ஹூ சாங் ஹூக் கூறினார். செப்டம்பர் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த சந்தேகப் பேர்வழிகள் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.