
கோலாலம்பூர், மார்ச் 23 – அரசாங்கத்தை குறை கூறியதை அடுத்து, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முஹம்மட் மீது, தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என, உள்துறை அமைச்சர் சைபூடின் நசுதியோன் இஸ்மாயில் ( Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.
எனினும், தேவை ஏற்பட்டால், முறையான நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தை தாம் போலிசிடம் விட்டுவிடுவதாக அவர் கூறினார்.
இதனிடையே யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைக் கூறலாம். ஆனால், சமயம், இனம், அரச அமைப்புகள் தொடர்பில் கருத்துகள் கூறுவதையும், எல்லை மீறி பேசுவதையும் தவிர்த்துக் கொள்ளும்படி அமைச்சர் அறிவுறுத்தினார்.