Latestமலேசியா

துபாயில் பயிற்சி எடுக்க லீ சீ ஜியா திட்டம்

கோலாலம்பூர், பிப் 11- ஐக்கிய அரபு அமீரகம் , துபாயில் பயிற்சியில் ஈடுபடும் திட்டம் தமக்கிருப்பதாக கூறியுள்ளார் நாட்டின் ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் லீ சீ ஜியா. ( Lee Zii Jia )

துபாயில் பயிற்சி எடுக்க முடிவெடுத்தால், அங்கு ஏற்கனவே பயிற்சி பெற்று வரும் , டென்மார்க்கைச் சேர்ந்த தொக்யோ ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளர் Viktor Axelsen-னுடம், 2021 –ஆம் ஆண்டு உலக வெற்றியாளரான சிங்கப்பூரைச் சேர்ந்த Loh Kean Yew- உடனும் லீ சி ஜியா இணைவார்.

இதனிடையே, தேசிய அணியிலிருந்து வெளியேறி தொழில்ரீதியாக தாம் விளையாட முடிவெடுத்திருப்பதை அடுத்து, பூப்பந்து விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் 4 பிரபல நிறுவனங்கள், விளம்பர ஆதரவுக்காக தம்மை நாடியிருப்பதாகவும் லீ சி ஜியா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!