Latestமலேசியா

துபாய் ‘மிஸ் டீன்  யுனிவெர்ஸ்’ அழகிப் போட்டியில் பங்கேற்கும் தேபர் ரேஷா தே

ஜோர்ஜ்டவுன், பிப்  27-  ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும்  மிஸ் டீன் யுனிவெர்ஸ் -பதின்ம வயது பெண்களுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை தேடித் தருவது தமது  விருப்பமாகுமெனக்  கூறியுள்ளார்  தேபர் ரேஷா தே ( Dheper Reshaa Teh) .

பினாங்கில் பிறந்து அம்மாநிலத்திலுள்ள  INTI கல்லூரியில் வர்த்தக துறையில்  டிப்ளோமா மேற்படிப்பை  தொடரும்  தேபர் , அந்த அனைத்துலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக,  நேற்று பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்பட்டார்.

அனைத்துலக அரங்கில் நாட்டின் தனித்துவம் வாய்ந்த கலாச்சாரத்தையும்,  பண்பாட்டினையும் பிரபலப்படுத்த அழகிப் போட்டியை தாம் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அந்த இளம் அழகி தெரிவித்தார்.

மக்கள் தனக்கு தொடர்ந்து  ஆதரவளிப்பதோடு, @missteenuniversepageants இன்ஸ்தாகிராம் அகப்பக்கத்தின் வாயிலாக தமக்கு வாக்களிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேபர் முதன் முதலாக  அழகியாக மகுடம்  சூடியது 2018 / 2019 மலேசிய மிஸ் டீன் அனைத்துலக அழகிப் போட்டியில்.  அதற்குப் பின்னர் அவர்  2019 -இல் இந்தியா, புதுடில்லியில் நடைபெற்ற  மிஸ் டீன் பிரபஞ்ச அழகிப் போட்டியிலும்,   இவ்வாண்டு  சீனா , குவாங்டோங்கில் நடைபெற்ற  மிஸ்  Tourism Global City அழகிப் போட்டியிலும் பங்கேற்றார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!