கோலாலம்பூர்,பிப் 28 – கோலாலம்பூர், ஜாலான் செலிங்சிங்-கில் (Jalan Selingsing), வீடொன்றில், தன்னைத் தானே தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட போலீஸ் அதிகாரி, வேலையில் உயர்நெறிக் கொண்டவர் என்பதோடு, சக பணியாளர்கள் மத்தியில் பிடித்தமானவராக இருந்தவர் என, செந்தூல் மாவட்ட போலிஸ் தலைவர் Beh Eng Lai தெரிவித்தார்.
35 வயதுடைய அந்த இன்பெக்டர் பதவி கொண்ட அதிகாரி கையூட்டை மறுத்ததற்காக தேசிய போலீஸ் படைத் தலைவரிடமிருந்து பாராட்டு கடிதத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மனைவியும் இரு பிள்ளைகளும் இருக்கும் அந்த அதிகாரி அவரது நண்பரின் வீட்டில் நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவத்தின் போது அந்த வீட்டில் நண்பர்கள் இருந்ததாக Beh Eng Lai தெரிவித்தார்.