
கெடா, பாலிங்கில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனை நடவடிக்கைகளில், துப்பாக்கி, 2.49 கிலோகிராம் எடையிலான கஞ்சா, வெடி மருந்துகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதனங்கள் ஆகியவற்றை வைத்திருந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 34 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என, கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் அஹ்மட் தெரிவித்தார்.
முதல் சோதனையில், துப்பாக்கியும், கஞ்சா பொட்டலங்களும் கண்டெடுக்கப்பட்ட வேளை ; இரண்டாவது சோதனையின் போது, வெடி மருந்துகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.