இஸ்கந்தர் புத்ரி, ஏப் 22 – சுங்க வரி செலுத்தப்படாத மதுபானங்களை ஏற்றிச் சென்ற லோரி ஓட்டுனருக்கு எதிராக போலீசார் துப்பாக்கி சூடு பிரயோகம் நடத்தி அவரை கைது செய்தனர். சுங்கத் துறை அதிகாரிகளிடமிருந்து தப்பியோட முயன்ற அந்த லோரி ஓட்டுனர் மூன்று போலீஸ் வாகனங்களைச் சேர்ந்த போலீஸகாரர்களின் உதவியோடு கைது செய்யப்பட்டார். Jalan Danga Bay யிலிருந்து Plaza Tol Lima Kedai வரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம்வரை சுங்கத்துறை மற்றும் போலீஸ் ரோந்துக் கார்கள் அந்த லோரியை துரத்திச் சென்றனர். கட்டாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து அந்த லோரி நிறுத்தப்பட்டதால் அதன் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது சம்பந்தப்பட்ட லோரி மோதியதால் போலீஸ் வாகனமும் சேதம் அடைந்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ Kamarul Zaman Mamat தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close
-
பெருவில் பஸ் விபத்தில் 24 பயணிகள் பலி3 hours ago