Latestமலேசியா

துப்புரவு, பழுதுபார்க்கும் பணிகளுக்காக 4 மோனோ இரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன – ராபிட் ரேல் தகவல்

கோலாலம்பூர், மே 8 – தலைநகரிலுள்ள, Bukit Nanas, Raja Chulan, Bukit Bintang மற்றும் Imbi மோனோ இரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நேற்று மாலை பெய்த அடை மழையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மோனோ இரயில் பாதையில் வேரோடு சாய்ந்த மரத்தை துப்புரவு செய்யவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும், அந்நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, Rapid Rail நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது.

எனினும், இன்று அதிகாலை மணி ஆறு முதல் பயணிகள் வழக்கம் போல தங்கள் பயணத்தைத் தொடர மாற்று சேவைக்கள் ஏற்படுத்தி தரப்படுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நான்கு மோனோ இரயில் நிலையங்களில் துப்புரவு மற்றும் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள, அங்க்கு மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டியது அவசியமாகும்.

அதனால், சம்பந்தப்பட்ட நிலையங்களில் இருந்து வழங்கப்படும் இலவச ராபிட் பேருந்து சேவைகளை பயணிகள் பயன்படுத்தலாம் எனவும் சேவை தடங்கலுக்காக வருந்துவதாகவும் ராபிட் இரயில் நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, DBKL கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் நான்கு துறைகளின் அதிகாரிகள் 30 பேர், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பிற்பகல் மணி இரண்டு வாக்கில், இடியுடன் கூடிய மழையை தொடர்ந்து, தலைநகர், Concorde Hotel-லுக்கு அருகிலுள்ள, ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில், மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததில், மோனோ இரயில் தண்டவாளம் உட்பட 17 வாகனங்கள் சேதமடைந்தன.

அச்சம்பவத்தில், 47 வயது நபர் ஒருவர் உயிரிழந்த வேளை ; மேலும் இருவர் காயமடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!