Latestமலேசியா

துயரத்தில் முடிந்த ஞாயிறு விடுமுறை; பாத்தாங் காலி, பாலாக் ஆற்றில் மூழ்கி தந்தையும் 2 பிள்ளைகளும் மரணம்

பாத்தாங் காலி, மே-6 – சிலாங்கூர், பாத்தாங் காலி அருகே வாரக் கடைசி விடுமுறையைக் கழிப்பதற்காகச் சென்ற போது தந்தையும் 2 பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Sungai Balak ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து தீயணைப்பு மீட்புத் துறை வந்து தேடியதில், காணாமல் போன இடத்தில் இருந்து 30 மீட்டர் தொலைவில் அம்மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் 43 வயது தந்தை, அவரின் 9 வயது பெண் பிள்ளை மற்றும் 6 வயது மகன் என அடையாளம் காணப்பட்டது.

சம்பவத்தின் போது ஆற்றில் நீர் பெருக்கு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கணவன்-மனைவி மற்றும் 7 பிள்ளைகள் என ஒரு குடும்பமாக ஞாயிறு விடுமுறையைக் கழிக்க அவர்கள் அங்குச் சென்றது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

அதன் போது இரு பிள்ளைகள் ஆற்றில் விழுந்து தத்தளித்த போது அவர்களைக் காப்பாற்ற தந்தையும் ஆற்றில் குதிக்க, கடைசியில் மூவரும் நீரில் மூழ்கி மாண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!