Latestமலேசியா

துயரில் முடிந்த உல்லாசப் பயணம்; பெச்சா பாத்து நீர்வீழ்ச்சியில் மூழ்கி 15 வயது பையன் மரணம்

ஈப்போ, செப்டம்பர் -1, பேராக், ஈப்போவிலுள்ள பெச்சா பாத்து (Pecah Batu) நீர்வீழ்ச்சிக்கு பதின்ம வயது நண்பர்கள் மேற்கொண்ட உல்லாசப் பயணம் துயரத்தில் முடிந்துள்ளது.

நேற்று மாலை நண்பர்கள் குழுவாக நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த போது அவர்களில் ஒருவன் திடீரென நீரில் மூழ்கினான்.

அங்கிருந்த பொது மக்கள் அப்பையனை வெளியே இழுத்து வந்து, CPR முதலுதவி சிகிச்சைகளை வழங்கினர்.

என்ற போதும் அவன் தொடர்ந்து பேச்சு மூச்சின்றி கிடந்தான்.

சம்பவ இடம் விரைந்த மருத்துவக் குழு அவன் உயிரிழந்து விட்டதை உறுதிச் செய்தது.

மரணமடைந்த பையன், 15 வயது Muhammad Aqif Mikhail Ali Arafat என அடையாளம் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!