துருக்கி, செப்டம்பர் 26 – அதிக வெப்பம் காரணமாக, கடந்த காலங்களில் கைத்தொலைபேசிகள் வெடித்த நிகழ்வுகள் அறிந்திருக்கிறோம்.
ஆனால், காதில் அணியும் Earbuds அதாவது காதொலிப்பனும் வெடிக்கும் என்பதை அறிவீர்களா?
அப்படி ஒரு சம்பவம்தான் துருக்கியில் அரங்கேறி, பெண் ஒருவரின் செவித்திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பெட்டியிலிருந்து புதிதாகத் திறக்கப்பட்ட Earbuds-யை தனது காதலனிடமிருந்து பெற்று, இந்தப் பெண் அணிந்திருக்கிறார்.
அப்போது, காதில் வைத்த சில நிமிடங்களில் ஒரு காதின் Earbud திடீரென வெடித்து, நிரந்தரமாக அந்தப் பெண் தனது செவித்திறனை இழந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த earbuds-யை சேவை மையத்திற்கு அந்தக் காதலன் எடுத்துச் சென்றிருக்கிறார்.
ஆரம்பத்தில், துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்திற்கு அது மன்னிப்பு கேட்டாலும், நிறுவனத்தின் சோதனைக்குப் பின் அந்த earbuds முழுமையாக உருவாக்கப்படவில்லை; ஆதலால் அது வெடிக்கவில்லை என்று கூறி புதிய earbuds-களை வழங்கியுள்ளது.
ஒருவேளை திருப்தியடைவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அந்நிறுவனம் அனுமதித்திருக்கிறது.