
கோலாலம்பூர், பிப் 1 2- மலேசிய ராணுவ படையின் கள மருத்துவமனை எதிர்வரும் செய்வாய்க்கிழமை முதல் Turkiye யேவில் Adiyaman , Celikhan னில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநோயளி சிகிச்சை பிரிவாக மலேசியாவின் கள மருத்துவமனை சேவையை வழங்கும். Gaziengtep பிலிருந்து 152 கிலோமீட்டர் தொலைவில் நில நடுக்கத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த மருத்துவமனை புதன்கிழமை முதல் இரண்டாவது கட்ட நடவடிக்கையாக அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் என மலேசிய ஆயுதப் படைகளின் தளபதி
Leftenan General Datuk Noor Mohamad Akmar தெரிவித்திருக்கிறார். பல்வேறு மருத்துவ துறைகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்களும் மலேசிய ராணுவ படையின் மருத்துவ குழுவில் இடம்பெற்றுள்ளனர்.