
அங்காரா, பிப் 12 – துருக்கியே மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24,000த்திற்கும் மேலாகியுள்ளது. கடந்த திங்கிட்கிழமை நில நடுக்கம் ஏற்பட்ட 122 மணி நேரத்திற்குப் பின் இடிபாடுகளிலிருந்து இரண்டு பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். கடுமையான குளிர், மீட்பு பணியாளர்களுக்கு சவாலாக இருந்தாலும் 31,000 பணியாளர்கள் தொடர்ந்து முழு வீச்சிலான தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நில நடுக்கத்தினால் காயம் அடைந்துள்ள 80,000த்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.