
புத்ரா ஜெயா, பிப் 6 – துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லையென விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது. Angkara விலுள்ள மலேசி தூதரகம் மற்றும் இஸ்தான்புல் நகரிலுள்ள தூதரக அலுவலகம் இது தொடர்பான ஆகக் கடைசிய நிலவரங்கள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசியர்களில் எவரும் துருக்கி நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டதாக எந்தவொரு தகவலும் இல்லையென மலேசிய தூதரம் அறிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.