Latestமலேசியா

துரோகத்திற்கு துணைபோக முடியாது அம்னோவுக்கு ஐவர் பதிலடி

கோலாலம்பூர், ஜன 9 – சபா முதலமைச்சர் Hajiji Noor-ரை கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என்ற கொள்கையை நிலைநிறுத்தியதற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் அது குறித்து கவலைப்படவில்லையென சபா
அம்னோவைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சபா அம்னோ எங்களை வெளியேற்ற முடிவு செய்தால் நாங்கள் புதிய கட்சி தொடங்கி Hajiji Noor தொடர்ந்து முதலமைச்சராக இருப்பதற்கு GRS எனப்படும் Gabungan சரவா கூட்டணிக்கு ஆதரவு வழங்குவோம் என Tanjung keramat சட்டமன்ற உறுப்பினர் Shahelmey Yahya , Pantai Dalit சட்டமன்ற உறுப்பினர் Jasni Daya , Sugut சட்டமன்ற உறுப்பினர் James Ratib (Sugut), Sindumin சட்டமன்ற உறுப்பினர் Yusof Yacob,
Tempasuk சட்டமன்ற உறுப்பினர் Arsad Bistari ஆகியோர் தெரிவித்தனர்.

Hajiji Noor-ருக்கான ஆதரவை மீட்டுக்கொண்டு அவருக்கு பதிலாக Warisan கட்சியின் தலவர் Shafie Apdal முதலமைச்சராக வருவதற்கு ஆதரவு வழங்கும் எழுத்துப் பூர்வமான சத்திய பிரமான பிரகடனத்திற்கு ஆதரவு வழங்கும் திட்டத்தையும் அவர்கள் நிராகரித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!