
ஜூன் 3, பிரான்ஸ் – ஈரான் நாட்டு மாடல் அழகி ஒருவர் தான் அணிந்திருந்த ஆடையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரான்ஸில் நடைப்பெற்று வரும்2023 கென்னஸ் திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட 33 வயது மாடல் அழகி மாலாக்க ஜபேரி (Mahlagha Jaberi) தூக்கு கயிறு வடிவில் ஆடை ஒன்றை அணிந்திருந்தார். அவரது அந்த் ஆடை பலரது கவனத்தை ஈர்த்திருந்ததோடு சர்ச்சைக்கும் ஆளாகியுள்ளது.
தன் நாட்டில் இடம்பெறும் தூக்குத் தண்டனை சட்டம் பற்றி இந்த கென்னஸ் திரைப்பட விழா மூலம் உலக மக்களுக்கு தெரிவிக்க தாம் இந்த ஆடை வடிடை தேர்ந்தெடுத்ததாக, தனது இன்ஸ்தாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜபேரி.
தனது இந்த ஆடையின் பின் பக்கத்தில் ”தூக்குத் தண்டனை நிறுத்தப்பட வேண்டும்” என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்ததாகவும், ஆனால் விழா ஏற்பாட்டுக் குழுவினர் அந்த வாசகத்தை காட்டக் கூடாது என கூறிவிட்டதாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
ஜபேரியின் இந்த செயல் மிகவும் துணிச்சல்கரமானது என பலர் பாராட்டினாலும், இன்னும் சிலர் அவர் அணிந்திருந்த ஆடை அவமானமிக்கதாக அமைந்திருந்ததாக கருத்து பதிவிட்டுள்ளனர். ஈரானில் இவ்வாண்டு மட்டுமே இதுவரை 200 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.