Latestஉலகம்

தூண் இடிந்து விழுந்தது தாயும் குழந்தையும் உயிரிழந்தனர்

பெங்களூரு, ஜன 10 – பெங்களூரில் கட்டமான பணியிடத்தில் மெட்ரோ ரயில் மேம்பால தூண் இடிந்து கீழே விழுந்ததில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு இரட்டைக் குழந்தைகள் கடுமையாக காயம அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் இரண்டரை வயது ஆண் குழந்தையும் இறந்தனர். அந்த பெண்ணின் கணவரும் , மற்றொரு பெண் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரின் நாகவாரா பகுதியில் இன்று காலையில் அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் துணை கமிஷனர் பீமன்சங்கர் தெரிவித்தார். அந்த விபத்தில் Tejasvini என்ற பெண்ணும் அவரது மகன் Vihan-னும் இறந்ததாக அடையாளம் கூறப்பட்டது. பொது மக்களின் உதவியோடு அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதிலும் சிகிச்சை வழங்கப்பட்டபோது மரணம் அடைந்தனர். Tejasvini யின் கணவர் Lohith-த்தும் மகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!