Latestமலேசியா

தூய்மையான, சமய நெறியுடன் கூடிய தைப்பூசத்தை உறுதிச் செய்ய சிறப்பு நடவடிக்கை குழு

கோலாலம்பூர், பிப் 1 – இவ்வாண்டு பத்துமலை உட்பட நாட்டின் முக்கிய முருகன் திருத்தலங்களில் தைப்பூசத் திருவிழா, சுமூகமாகவும், தூய்மையான நிலையிலும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, கடந்த காலங்களைப் போன்றே இம்முறையும் ‘Thaipusam Task Force’ எனப்படும் தைப்பூச நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு, பத்துமலை, ஈப்போ , பினாங்கு, குவாலா சிலாங்கூர் ஆகிய நான்கு இடங்களில் உள்ள முக்கிய முருகன் திருத்தலங்களில் , ஊராட்சி மன்றங்களுடன் இணைந்து சமய நெறியுடன் தைப்பூசம் வரவேற்கப்படுவதை உறுதிச் செய்யவிருப்பதாக அந்த நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

முருகன் திருத்தலங்களில் Clean Thaipusam எனப்படும் முருகன் திருத்தலங்கள் தைப்பூசம் நெடுகிலும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்கும் நடவடிக்கையிலும் தைப்பூச நடவடிக்கை குழுவினர் ஈடுபடவிருக்கின்றனர்.

இதனிடையே, பத்துமலை முருகன் திருத்தலத்தில் 4,5 -ஆம் தேதிகளில் இந்து சேவை சங்கத்துடனும், சேவை ஆஷ்ரம் மலேசியா அமைப்புடனும் சேர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுமெனவும் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இவ்வேளையில், பக்தர்கள் நீராடி வருவதற்காக, Batu caves KTM Komuter நிலையத்திற்கு பின் அமைந்திருக்கும் இரண்டாம் ஆற்றங்கரைக்கு செல்வதற்காக, அந்த நிலையத்திற்குப் பின்னால் இருக்கும் கதவு , பக்தர்களின் வசதிக்காக இவ்வாண்டும் தற்காலிகமாக திறக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதனால், அந்த ஆற்றங்கரைக்கு செல்வதற்காக இருக்கும் மற்றொரு வழியான மேம்பாலத்தை சுற்றி வரவேண்டிய நிலையையும், நெரிசலையும் பக்தர்கள் தவிர்க்க முடியுமென அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!