Latestஉலகம்சினிமா

மாரடைப்பால் சிகிச்சைப் பெற்று வந்த ‘லொள்ளு சபா’ பிரபலம் நடிகர் சேசு மறைவு

சென்னை, மார்ச் 27 – தமிழகத்தின் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்.

மாரடைப்பு ஏற்பட்டு அண்மையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு, சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்; அவருக்கு வயது 60.

தனது வித்தியாசமான உடல் மொழியாலும், ஏற்ற இறக்கமான வசன உச்சரிப்பாலும் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தவர் சேசு.

லொள்ளு சபா நிகழ்ச்சியில் பண்பட்ட நடிகை காந்திமதியை நினைவூட்டும் வகையில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம் அடைந்தது நினைவிருக்கலாம்.

துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவில் அறிமுகமான சேசு, கடைசியாக சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!