
போர்ட் டிக்சன், மார்ச் 13 – போர்ட் டிக்சன், தெலுக் கெமாங் ( Teluk Kemang) PD Wellness Zone பகுதியில் சுற்றுப் பயணிக்கு விதிக்கப்படும் 5 ரிங்கிட் கட்டணம், அப்பகுதியின் தூய்மையைப் பேணுவதற்காக விதிக்கப்படும் கட்டணம் என போர்ட் டிக்சன் நகராண்மைக் கழகத் தலைவர் சம்ரி மொஹமட் எசா ( Zamri Mohd Esa ) தெரிவித்தார்.
அந்த பகுதி எப்போதும் சுத்தமாக இருப்பதற்காக, நகராண்மைக் கழகம் நிறுவனமொன்றை நியமித்துள்ளது.
அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம், தூய்மையைப் பேணுவதற்கு மட்டுமல்ல, அப்பகுதியின் எழில் அமைப்பை மெருகூட்டவும், வசதிகளை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுவதாக, Zamri தெரிவித்தார்.
போர்ட் டிக்சனில் நடைபாதையில், பாயை விரித்து அமர்ந்ததற்காக , சுற்றுப் பயணி ஒருவருக்கு 5 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்டதாக பெரிதும் பகிரப்பட்ட தகவல் தொடர்பில், அவர் அந்த விளக்கத்தினை தந்தார்.