கோலாலம்பூர், செப்டம்பர் 15 – ஒரு சமயத்தில் மஇகா கட்சியைத் தூற்றி பேசிய தலைவர்களு எல்லாம் இப்போதுதான் அரசியல் களத்தில் கட்சியின் பங்களிப்பு புரிகிறது.
இதனை மஇகா கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன், 78ஆவது மஇகா தேசியப் பொது பேரவையின் போது தெரிவித்தார்.
இந்திய சமுதாய நலனையும் உரிமையையும் உறுதி செய்வதில் இன அடிப்படையில் செயல்படும் கட்சி, எவ்வளவு முக்கியம் என்பதை அரசாங்கத்தில் இடம்பெற்று செயல்படும் போதுதான் பல தலைவர்கள் உணர்ந்துள்ளனர் என்றார் அவர்.கட்சி சமூதாயத்தின் நலன் கருதியே செயல்படுகிறது.
ஒளிவு மறைவு இன்றி செயல்படும் ஒரு கட்சியாகத்தான், மஇகா செல்கிறது.
இந்நிலையில், கட்சியை மேலும் பொருளாதார நிலையில், சுய காலில் நிற்கும் வகையில் வலுப்படுத்த மஇகாவின் புதிய கட்டிடமும் வழிவகுக்கவுள்ளது என்றார், அவர்.
மக்களுக்காக குரல் எழுப்பும் இக்கட்சி, தூர நோக்கு இலக்கை அடைய வேண்டும் என்றால் அதற்கு கிளை தலைவர்கள் பொறுப்புடன் தங்களின் கடமையைச் செய்ய வேண்டும் என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன், தனது கொள்கை உரையில் வலியுறுத்தினார்.
ஒவ்வோரு தொகுதி உறுப்பினர்களும், கிளைகளை சீர்படுத்தி, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றார், அவர்.
இன்று 78ஆவது போராளர் மாநாட்டில் நாடு தழுவிய நிலையிலிருந்து 1500க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டனர்.