
சியோல், ஜூன் 30 – தென்கொரியாவில், ஒரு மணி நேரத்திற்கான குறைந்த பட்ச சம்பள விகிதத்தை, அடுத்தாண்டு முதல் ஐந்து விழுக்காடு வரை அதிகரிக்க, அந்நாட்டு தொழிலாளார் -நிர்வாக சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் கண்டிருக்கின்றனர்.
அதன் படி , ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 9,620 won அதாவது மலேசிய நாணய மதிப்பின்படி 32 ரிங்கிட் 58 சென்னாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அந்த புதிய குறைந்தபட்ச சம்பள விகிதம் அனைத்து தொழில்துறைகளுக்கும் பயன்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.