Latestமலேசியா

தென்னைமரம் தோட்ட விவகாரம்; சிலாங்கூர் அரசின் வாக்குறுதி என்னவானது? குடியானவர்கள் கேள்வி

கோலாலம்பூர், நவ 24 – பெஸ்தாரி ஜெயா , தென்னைமர தோட்டத்தின் நிலத்தை தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட விவகாரத்தில் சிலாங்கூர் அரசாங்கத்தின் விசாரணையின் முடிவு என்னவானது என அந்த தோட்டத்தின் குடியானவர்கள் கேள்வி எழுப்பினர். ஏழு மாதங்களுக்கு முன் விசாரணை நடத்துவதாக சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்தது என குடியானவர்களின் பிரதிநிதியான வி. ஜெயராமன் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிலாங்கூர் நிலம் மற்றும் கனிம அலுவலகம் முழுமையாக விசாரணை நடத்தும் என மாநில மந்திரிபுசாரின் அரசியல் செயலாளர் Juwairiya Zulkifli கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். 7 மாதங்களாகிவிட்ட போதிலும் இந்த விசாரணையின் முடிவை இன்னமும் சிலாங்கூர் அரசாங்கம் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிப்பதாக அவர தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நாளை மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளுடன் பேச்சு நடத்தும் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜா ஜோர்ஜ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!