கேப் டவுன், பிப் 28 – தென் ஆப்பிரிக்காவில் காண்டாமிருகம், சிறுத்தை, யானை உள்ளிட்ட பெரிய மிருகங்களை வேட்டையாடுவதற்கு அந்நாடு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
அந்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை பெருகினாலும், வருடத்திற்கு அவ்வெண்ணிக்கையிலிருந்து 0.3 விழுக்காடு யானைகளே வேட்டையாடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து, ஆண்டிற்கு கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட யானைகளையும், 150 காண்டாமிருகங்களை வேட்டயாடுவதோடு ஏற்றுமதி செய்யலாமென தென் ஆப்பிரிக்க வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்திருக்கின்றது.
அதிலும், குறிப்பிட்ட இந்த விலங்குகள் இனப்பெருக்கம் அதிகமுள்ள பகுதிகளிலேயே, அவை வேட்டையாடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.