Latestமலேசியா

தென் கிழக்காசியாவின் மிகப் பெரிய ஆமை கடத்தல் கும்பல் கிள்ளான் பள்ளத்தாக்கில் முறியடிப்பு

கோலாலம்பூர், ஜூலை 11 – தென் கிழக்காசியாவில் மிகவும் திட்டமிட்ட வகையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த மிகப் பெரிய ஆமை கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டது. சிலாங்கூரில் அம்பாங்கில் செயல்பட்டு வந்த இக்கும்பல் குமாஸ்தா, நிர்வாகி உட்பட பல அடுக்குகளை கொண்ட தொழிலாளர்களுடன் செயல்பட்டு வந்துள்ளதும் நிருபணமாகியுள்ளது. ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து பல்வேறு வகையான ஆமைகளை கடத்திவந்த அவற்றை விற்பனை செய்துவந்த அந்த கும்பலை ஜூலை 2 ஆம்தேதி பெர்ஹிலித்தான் மற்றும் போலீஸ் குழு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் முறியடிக்கப்பட்டதாக Perhilitan தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹசிம் ( Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.

உள்நாட்டவர்களால் செயல்பட்டு வந்த இக்கும்பல் கடந்த ஐந்து ஆண்டு காலமாக செயல்பட்டு வந்துள்ளதாக போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது சிலாங்கூரின் அம்பாங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எட்டு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் இக்கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. அவர்களில் கம்போடியாவைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூன்று ஆடவர்களும் அடங்குவர். கடத்திவரப்பட்ட ஆமைகளை தங்களது அலுவலக கட்டிடத்தின் உள்ளேயே வளர்க்கும் மையத்தையும் இக்கும்பல் நடத்தி வந்துள்ளதோடு இதற்காக சிறப்பாக கம்போடிய பிரஜை ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார். ஆமைகளை கடத்தி வருவற்காக அவர்கள் விமான சேவைகளை பயன்படுத்தி வந்தனர். ஆமை கடத்தல் வருமானத்தின் மூலம் இந்த கும்பல் பெரிய அளவில் வருமானம் சம்பாதித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!