Latestஉலகம்

தென் கொரியாவில் நடுவானில் விமானத்தின் அவசரக் கதவை திறந்த பயணிக்கு RM2.6 million அபராதம்

சியோல், செப்டம்பர் -7 – தென் கொரியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறந்த பயணிக்கு, நீதிமன்றம் RM2.6 Million ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

Asiana Airlines விமானம் 213 மீட்டர் உயரத்தில் தரையிறங்குவதற்குத் தயாரான போது, திடீரென அவசரக் கதவைத் திறந்ததாக, 30 வயது ஆடவர்
கடந்தாண்டு நவம்பரில் குற்றம் நிரூபிக்கப்பட்டார்.

இந்நிலையில் விமான நிறுவனத்திற்கு அவர் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றம் நேற்று முடிவுச் செய்தது.

கடந்தாண்டு மே மாதம் 26-ஆம் தேதி பள்ளி மாணவர்கள் உட்பட 197 பயணிகளுடன் விமானம் சென்று கொண்டிருந்த போது, 9 ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அவர்களுக்கு உரிய முதலுதவி வழங்கப்பட்ட நேரத்தில், தனக்கும் மூச்சுத் திணறுவதாகக் கூறி சம்பந்தப்பட்ட ஆடவர் தன்னிச்சையாக விமானத்தின் அவசரக் கதவைத் திறந்து விட்டார்.

இதனால், அவசரக் கதவும், பயணிகள் சறுக்கி தப்பிக்கும் emergency slide மெத்தையும் சேதமடைந்து, விமான நிறுவனத்துக்கு RM2.34 million ரிங்கிட் நட்டமேற்பட்டது.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

கைதான நபருக்கு ஏற்கனவே மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, மனநல பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!