
கோலாலம்பூர், செப் 8 – தென் சீனக் கடல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு மலேசியா விரும்புவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். 1982 ஆம் ஆண்டின் அனைத்துலக கடல் சட்டத்திற்கு உட்பட்டு தென் சீனக் கடல் நெருக்கடிக்கு தீர்வு காணும் கடப்பாட்டை மலேசியா கொண்டிருப்பதாக அவர் கூறினார். இந்னோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று தொடங்கிய ஆசியாவின் 43 ஆவது உச்சநிலைக் கூட்டம் மற்றும் கிழக்காசிய 18ஆவது உச்சநிலைக் கூட்டத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். தென் சீனக் கடல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு அதில் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் முன்வர வேண்டுமென அன்வார் கேட்டுக்கொண்டார்.