தெமர்லோ, ஆகஸ்ட்-28 – பஹாங், தெமர்லோவில் நேற்றிரவு இரு லாரிகள் மோதிக் கொண்டதில் அந்நிய நாட்டவர் இருவர் கொல்லப்பட்டனர்.
நால்வரை ஏற்றியிருந்த Inokom லாரியும், 38 வயது ஆடவர் ஓட்டி வந்த Volvo டிரேய்லர் லாரியும் Lanchang, Jalan Utama Bukit Damar சாலையில் மோதிக் கொண்டன.
ரவூப்பிலிருந்து குவாந்தான் நோக்கி வந்து கொண்டிருந்த Inokom லாரி, கட்டுப்பாட்டை இழந்து எதிர்புற சாலையில் கவிழ்ந்தது.
அவ்வழியாக வந்த டிரேய்லர் லாரி Inokom லாரியை மோத, இரண்டுமே 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தன.
அதில், தலையில் படுகாயமடைந்த வங்காளதேசியும், பாகிஸ்தானியரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்ற மூவருக்கும் காயத்திற்கு சிகிச்சைப் பெறுவதற்காக தெமர்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அவ்விபத்து விசாரிக்கப்படுகிறது.