தெமர்லோ, ஆகஸ்ட் 28 – தெமர்லோ, கம்போங் பாரு பெலெங்கில் (Kampung Baru Belenggu), நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளுடன் போதைப்பொருள் வைத்திருந்த வேலையில்லாத ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
40 வயதுடைய அந்த ஆடவனிடமிருந்து 55 கிராம் எடையுள்ள 6,500 ரிங்கிட் மதிப்பிலான ஷாபு என நம்பப்படும் போதைப்பொருட்களை காவல்துறை கைப்பற்றியுள்ளது.
இரவு 11 மணியளவில் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அந்த ஆடவன் மெத்தாம்பெட்டமைன் (methamphetamine) போதைப்பொருளை உட்கொள்பவன் மட்டுமல்லாது, முன்னதாக அந்த போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.