ஈப்போ, பிப் 27- ஈப்போ, குனுங் ராபாட்டிலுள்ள தாசிக் செர்மின் ( Tasik Cermin, Gunung Rapat) பகுதிக்கு அருகில் , இறந்து கிடந்த ஏறக்குறைய 20 தெருநாய்களுக்கு விஷம் வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
முன்னதாக இறந்த அந்த நாய்களின் உடல்களை , ஈப்போ நகராண்மைக் கழக ஊழியர்கள் அள்ளிச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.
விஷம் வைத்து நாய்களை கொல்லும் அளவில் மக்கள் கொடுமையாக நடந்துக் கொள்ள வேண்டாமெனவும், சொந்தமாக ஒரு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டாமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். விலங்குகள் நல சட்டத்தின் கீழ் விலங்குகளை கொல்பவர்களுக்கு எதிராக ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க முடியுமென ரிக்கி சூங் கூறினார்.
தமது தரப்பு நகராண்மைக் கழகத்துடன் சேர்ந்து, தெருநாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்யும் திட்டத்திற்கு தாங்கள் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நகராண்மைக் கழக ஊழியர்கள் தெருநாய்களுக்கு விஷம் வைத்ததாக கூறப்படுவதை பேராக் ஊராட்சி குழு தலைவர் டத்தோ நோலி அஷிலின் மொஹமம்ட் ரட்சி மறுத்தார். தெருநாய்கள் இறந்து கிடப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், அவற்றை அப்புறப்படுத்தவே நகராண்மைக் கழக ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்றதாகவும் அவர் கூறினார்.