
பிதாஸ் , ஜூன் 8 – தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 வயது சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம்
பிதாஸில் நடந்துள்ளது.
காலை 6 மணி அளவில் சுமார் 7 நாய்கள் வட்டமிட்டு ஏதோ ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட அவ்வழியாக சென்ற கணவன் மனைவி இருவர், அருகில் சென்று பார்த்தபோது அது ஒரு சிறுவன் என்பதைப் பார்த்ததும் அதிர்ந்துள்ளனர்.
உடனே நாய்களை விரட்டி அச்சிறுவனைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அச்சிறுவனின் தாயார் அதிகாலையில் வேலைக்குச் சென்றபோது, அம்மாவுக்கு தெரியாமல் அச்சிறுவன் பின்னாலே சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது