
பிட்பைன் (Bitfine) முதலீட்டு திட்டத்தை நம்பி, 37 வயது உள்நாட்சு ஆடவர் ஒருவர் 58 ஆயிரத்து 800 ரிங்கிட் பணத்தை பறிகொடுத்தார்.
தெலிகிராம் சமூக ஊடகம் வாயிலாக அறிமுகமான நபரை நம்பி அவர் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
மார்ச் மாதம் 17-ஆம் தேதி, அறிமுகமான அந்நபரை முதலில் அந்த ஆடவர் நம்பவில்லை. எனினும், அவருடன் உரையாடியதில் அந்த முதலீட்டு திட்டத்தில் அவர் ஆர்வம் கொள்ளத் தொடங்கியதாக, செந்தூல் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அஹ்மட் சுகார்நோ முஹமட் ஜஹாரி தெரிவித்தார்
முதலாவது முதலீட்டில் 543 ரிங்கிட் லாபத்தை ஈட்டியதை தொடர்ந்து, ஏப்ரல் 27-ஆம் தேதி தொடங்கி இம்மாதம் எட்டாம் தேதி வரையில், எட்டு வங்கி பணபரிமாற்று நடவடிக்கைகள் வாயிலாக மொத்தம் 58 ஆயிரத்து 800 ரிங்கிட்டை அவர் இழந்ததாக சுகார்நோ சொன்னார்.
அந்த மோசடி சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.