மஞ்சோங், மே 9 – Jalan Teluk Intan – Seri Manjung கில் ஐந்து நண்பர்கள் பயணம் செய்த கார் கவிழ்ந்ததில் இருவர் மரணம் அடைந்ததோடு மேலும் மூவர் காயம் அடைந்தனர். அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் 24 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் இறந்தனர். அக்கார் ஓட்டுனரான 20 வயது ஆடவரும் மேலும் இரண்டு இளைஞர்களும் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.